எழுத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழுத்து1எழுத்து2

எழுத்து1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள) வரிவடிவம்.

  ‘பிராமி எழுத்துகள்’
  ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’

 • 2

  கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றின் பொதுப்பெயர்; எழுத்தாளரின் நடை.

  ‘என் எழுத்து அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்’
  ‘அவருடைய எழுத்தில் மனத்தைப் பறிகொடுத்தவர்கள் பலர்’
  ‘அவருடைய எழுத்து அலாதியானது’

 • 3

  (ஒரு செய்தி, புகார் முதலியவற்றின்) எழுதிய வடிவம்.

  ‘சம்பவத்தைப் பற்றி எழுத்து மூலமாகப் புகார் கொடுத்திருக்கிறீர்களா?’

 • 4

  வட்டார வழக்கு கடிதம்.

  ‘ஊருக்கு எழுத்து போட வேண்டும்’

 • 5

  பேச்சு வழக்கு தலையெழுத்து.

  ‘என்னுடைய எழுத்து இப்படி இருக்கும்போது யாரைப் போய் நோவது?’
  ‘‘அவரவர் எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’ என்று அவர் சலித்துக்கொண்டார்’

எழுத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எழுத்து1எழுத்து2

எழுத்து2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (திருமண) பதிவு.

  ‘நாளைக்கு என் மகளுக்கு எழுத்து. நீங்கள்தான் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும்’