தமிழ் ஏந்து யின் அர்த்தம்

ஏந்து

வினைச்சொல்ஏந்த, ஏந்தி

 • 1

  (வில், கொடி முதலியவற்றைக் கையில் பிடித்து, தோளில் சாத்திச் சற்று) உயர்த்திய நிலையில் தாங்குதல்.

  ‘வில் ஏந்திய இராமன் சிலை’
  ‘கட்சித் தொண்டர்கள் கொடி ஏந்தி வருகிறார்கள்’
  ‘நகரில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் காவல்’

 • 2

  (உள்ளங்கையில் ஒன்றை வைத்து மார்புக்கு நேராக) பிடித்தல்.

  ‘பால் செம்பை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தார்’
  ‘இப்படிச் செலவு செய்தால் திருவோடு ஏந்த வேண்டியதுதான்’

 • 3

  (ஒன்றைப் பெறுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளங்கையை ஒன்றுசேர்த்துக் குழித்து அல்லது துணி முதலியவற்றை விரித்து) முன் நீட்டுதல்.

  ‘பிச்சைக்காரனிடம் பாத்திரம் இல்லை; கை ஏந்திச் சாதத்தை வாங்கிக்கொண்டான்’
  ‘ஏந்திய மடியில் அரிசியைப் போட்டேன்’

 • 4

  (ஒன்றுக்கு ஆதாரமாக அல்லது ஒன்று தரையில் விழாமல்) தாங்குதல்.

  ‘மோவாயை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்’
  ‘மாடியிலிருந்து விழுந்த குழந்தையை அவர் இரு கையாலும் ஏந்தி உயிரைக் காப்பாற்றினார்’