தமிழ் ஏய் யின் அர்த்தம்

ஏய்

வினைச்சொல்ஏய்க்க, ஏய்த்து

 • 1

  (நம்பும்படியாக நடந்துகொண்டு) ஏமாற்றுதல்.

  ‘வீட்டை என் பேரில் எழுதிவைப்பதாக எத்தனையோ முறை சொன்னவர் கடைசியில் என்னை ஏய்த்துவிட்டார்’
  ‘என்னை ஏய்க்கலாம், ஊரை ஏய்க்க முடியாது’

 • 2

  (ஏமாற்றி) தப்பிக்க முயலுதல்.

  ‘கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏய்த்துக்கொண்டுவருகிறான்’
  ‘வரி கட்டாமல் ஏய்ப்பது குற்றம்’