தமிழ் ஏறிடு யின் அர்த்தம்

ஏறிடு

வினைச்சொல்ஏறிட, ஏறிட்டு

  • 1

    தலையை நிமிர்த்தி (ஒருவரை) பார்த்தல்; பார்வையை (ஒருவரை அல்லது ஒன்றை நோக்கி) செலுத்துதல்.

    ‘குழப்பம் அடைந்தவளாக அவனை ஏறிட்டுவிட்டுக் கேட்டாள், ‘நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?’’
    ‘அம்மாவின் முகத்தைக் குழந்தை ஏறிட்டுப் பார்த்தது’
    ‘வாசலில் உட்கார்ந்திருந்த யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் வெளியே சென்றான்’