தமிழ் ஏவல் யின் அர்த்தம்

ஏவல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைச் செய்யுமாறு இடும்) ஆணை; கட்டளை.

  ‘தந்தையின் ஏவலை ஏற்றுக் காட்டுக்குச் சென்ற இராமன் கதை’

 • 2

  (பிறர் விதிக்கும் அல்லது இடும்) பணி.

  ‘வேலை செய்பவர்கள் கைகட்டி ஏவல் செய்யக் காத்திருந்த காலம் போய்விட்டது’
  ‘யாரிடமும் ஏவல் செய்ய விரும்பாததால் அவர் சொந்தமாகத் தொழில் தொடங்கினார்’

 • 3

  இலக்கணம்
  ஒன்றைச் செய்யச் சொல்லும் விதத்தில் உள்ள வினை வடிவம்.

  ‘‘நீ இங்கு வா’ என்ற வாக்கியத்தில் ‘வா’ ஏவல் வினை வடிவத்தில் உள்ளது’

 • 4

  (தாக்குவதற்காக) தூண்டிவிடப்படுவது.

  ‘ஏவல் நாயின் கோரப் பிடியில் சிக்கினான்’

 • 5

  வட்டார வழக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தில் ஒருவர்மீது பேய் போன்ற தீயசக்திகளை ஏவுதல்.

  ‘அவன் இரத்த வாந்தி எடுப்பதற்குக் காரணம், யாரோ அவனுக்கு ஏவல் வைத்துவிட்டதுதானாம்’