தமிழ் ஒட்டி யின் அர்த்தம்

ஒட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சுமார் பதினைந்து செ.மீ. நீளத்தில் செதிள்கள் இல்லாமல் இருக்கும் (உணவாகும்) சாம்பல் நிறக் கடல் மீன்.

  ‘பிள்ளைக்குப் பால் கொடுப்பவளுக்கு ஒட்டி மீன் நல்லது’

தமிழ் ஒட்டி யின் அர்த்தம்

ஒட்டி

இடைச்சொல்

 • 1

  ‘(ஓர் இடத்தில்) மிகக் குறைவான இடைவெளி விட்டு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘அடுத்தாற்போல்’.

  ‘சுவரை ஒட்டிக் கட்டிலைப் போடு!’
  ‘குடிசையை ஒட்டிச் சாக்கடை ஓடுகிறது’
  ‘கோயிலை ஒட்டிக் கடைத்தெரு இருக்கிறது’

 • 2

  (காலத்தில்) ‘அடுத்து’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘தொடர்ந்து’.

  ‘மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டதை ஒட்டித் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது’
  ‘கிராமத் திருவிழாக்களை ஒட்டியே கூத்து, கரகம் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன’
  ‘ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி இரு நாட்கள் விடுமுறை கேட்டிருக்கிறேன்’

 • 3

  ‘(குறிப்பிடப்படும்) அளவிலிருந்து மிகவும் வேறுபடாமல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘மூன்று ஆண்டுகளாகக் கோதுமை விளைச்சல் ஐந்து டன்னை ஒட்டியே இருந்து வந்திருக்கிறது’