தமிழ் ஒத்துவா யின் அர்த்தம்

ஒத்துவா

வினைச்சொல்-வர, -வந்து

 • 1

  இணக்கமாக இருத்தல்; சரிப்பட்டுவருதல்.

  ‘எனக்கும் அவனுக்கும் ஒத்துவராததால் அவனுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்’
  ‘நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கும் என் சுதந்திரத் தன்மைக்கும் ஒத்துவரவில்லை’

 • 2

  ஒத்துக்கொள்ளுதல்.

  ‘உங்களுக்கு இந்த ஊரின் குளிர் ஒத்துவருகிறதா?’
  ‘பாட்டிக்கு நகர நாகரிகம் ஒத்துவருமா?’

 • 3

  (ஒன்றுக்கொன்று) ஒத்திருத்தல்.

  ‘இருவர் போட்டதும் ஒரே கணக்கு; விடை ஒத்துவரவில்லையா?’