தமிழ் ஒப்பந்தம் யின் அர்த்தம்

ஒப்பந்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (நபர்கள், அமைப்புகள், நாடுகள் போன்றவை ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை.

  ‘வீட்டை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டோம்’
  ‘இந்திய, அமெரிக்க நாடுகளிடையே அணுசக்தி குறித்த ஒப்பந்தம் பற்றித் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன’
  ‘ஒப்பந்த காலம் முடியும் வரை ராணுவத்தை விட்டு வெளியேற முடியாது’
  ‘முப்பது ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு கோயில் நிலங்களைப் பயிரிட எடுத்துக்கொண்டார்’