தமிழ் ஒப்பனை யின் அர்த்தம்

ஒப்பனை

பெயர்ச்சொல்

 • 1

  (திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிப்பவர்களின்) முகத்திலும் கை, கால் போன்ற உறுப்புகளிலும் வண்ணக் கலவையைப் பூசி அல்லது உடை, அணிகலன் ஆகியவற்றை அணியச்செய்து குறிப்பிட்ட தோற்றத்தை உருவாக்கும் கலை.

  ‘இந்தப் படத்தில் கிழவராக நடித்தது ஒரு இளைஞராம்! ஒப்பனை அவ்வளவு நன்றாக இருந்தது’
  ‘தெருக்கூத்துக் கலைஞர்களின் ஒப்பனையில் பாத்திரங்களின் தன்மையைக் காட்டும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன’

 • 2

  (பெரும்பாலும் பெண்கள்) அழகிற்காகச் செய்துகொள்ளும் முக அல்லது முடி அலங்காரம்.

  ‘அழகுக்கு அழகு செய்வதுபோல் இருந்தது அவள் ஒப்பனை’
  ‘ஒப்பனை செய்துகொள்ளாமல் அவள் வெளியே புறப்படுவதே இல்லை’