தமிழ் ஒரு யின் அர்த்தம்

ஒரு

பெயரடை

 • 1

  ‘ஒன்று’ என்னும் எண்ணின் பெயரடை.

  ‘சட்டைப் பையில் கிடந்த ஒரு ரூபாயைப் பிச்சைக்காரனுக்குப் போட்டான்’

 • 2

  பலரை அல்லது பலவற்றைக் கொண்டிருக்கும் தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற வகையில் குறிப்பிடுகிற அல்லது எடுத்துக்காட்டுகிற.

  ‘இந்தியா போன்ற ஒரு நாட்டில்...’

 • 3

  ‘இன்னது இப்படி’ அல்லது ‘இவர் இப்படி’ என்ற திட்டவட்டமான எண்ணத்தை வெளியிடப் பயன்படுத்தும் ஒரு சொல்.

  ‘இதுவும் ஒரு அழகுதான்’
  ‘இது ஒரு வீடா?’
  ‘இது ஒரு படமா?’