தமிழ் ஒருத்தன் யின் அர்த்தம்

ஒருத்தன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒருவன்.

  ‘மேடையில் ஒருத்தன் பாடிக்கொண்டிருந்தான்’
  ‘இந்தப் பெட்டியைத் தூக்க ஒருத்தன் வந்தால் போதாது’

 • 2

  பேச்சு வழக்கு (முன்னிலையிலும் படர்க்கை ஒருமையிலும் ஒரு பிரதிப்பெயரோடு வரும்போது) கோபத்தில் அல்லது எரிச்சலில் ஒருவனைக் குறிப்பிடும் சொல்.

  ‘இவன் ஒருத்தன், சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டான்’