தமிழ் ஒலிபரப்பு யின் அர்த்தம்

ஒலிபரப்பு

வினைச்சொல்-பரப்ப, -பரப்பி

 • 1

  (வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக அனுப்புதல்.

  ‘கால்பந்தாட்டத்தைப் பற்றிய நேர்முக வர்ணனை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒலிபரப்பப்படும்’

 • 2

  (ஒருவரின் பேச்சு, பாடல், இசை போன்றவற்றைப் பதிவு செய்து) ஒலிக்கச்செய்தல்.

  ‘மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்ற அறிவிப்பைச் சுகாதாரத் துறையினர் எல்லாக் கிராமங்களிலும் ஒலிபரப்பினார்கள்’

தமிழ் ஒலிபரப்பு யின் அர்த்தம்

ஒலிபரப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக அனுப்பும் செயல்.

  ‘காலை ஒலிபரப்பு இத்துடன் முடிவடைகிறது’