தமிழ் ஒளிர் யின் அர்த்தம்

ஒளிர்

வினைச்சொல்ஒளிர, ஒளிர்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (எரியும் பொருளிலிருந்து) ஒளி வெளிப்படுதல்.

  ‘வானில் விண்மீன்கள் ஒளிர்ந்தன’

 • 2

  உயர் வழக்கு (ஒளியினால் ஒன்று) பளபளப்பு அடைதல்.

  ‘அவள் உடலின் மேல் இருந்த நீர்த் துளிகள் ஒளிர்ந்தன’
  ‘மாலையில் வானம் தங்க நிறத்துடன் ஒளிர்ந்தது’