தமிழ் ஓடிப்போ யின் அர்த்தம்

ஓடிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (மன வருத்தத்தால் வீட்டை விட்டு) வெளியேறுதல்; (காதலிப்பவருடன்) ரகசியமாக வெளியேறுதல்.

    ‘பையன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டான் என்பது பெற்றோருக்கு ஒரு நாள் கழித்துதான் தெரிந்தது’
    ‘ஓடிப்போன தன் மகளை நினைத்து அவர் கண்ணீர் விடாத நாளே இல்லை’