தமிழ் ஓய்வு யின் அர்த்தம்

ஓய்வு

பெயர்ச்சொல்

 • 1

  (வேலையை முடித்தபின்) களைப்பை நீக்கிப் பெறும் அமைதி; ஆறுதல்.

  ‘கிடைத்த ஒரு மணி நேர ஓய்வைக்கூட அனுபவிக்க முடியாதபடி தொலைபேசியில் அழைப்பு’

 • 2

  (உடலுக்கு வேலை தராமலும் உள்ளத்துக்குக் கவலை ஏற்படுத்தாமலும் இருக்கும்) பூரண அமைதி நிலை.

  ‘ஒரு மாத காலம் என்னை ஓய்வில் இருக்கும்படி மருத்துவர் கூறிவிட்டார்’
  ‘கவலையை விடுங்கள், ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’

 • 3

  இயற்பியல்
  ஒரு பொருள் அது இருக்கும் நிலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து இருப்பது.

  ‘ஓய்விலிருக்கும் ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை அந்தப் பொருள் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்’

 • 4

  (பெரும்பாலும் ஒருவரின் பெயரை அடுத்து வரும்போது) (அரசு) பணிக்காலம் முடிந்த நிலை.

  ‘அவர் பெயரை அடுத்து ‘செயற்பொறியாளர் (ஓய்வு)’ என்று அச்சிடப்பட்டிருந்தது’