தமிழ் ஓலை அனுப்பு யின் அர்த்தம்

ஓலை அனுப்பு

வினைச்சொல்அனுப்ப, அனுப்பி

  • 1

    கடிதத்தின் மூலம் விரும்பத் தகாத செய்தியைத் தெரியப்படுத்துதல்.

    ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம் நிர்வாகம் ஓலை அனுப்பிவிட்டது என்பது உனக்குத் தெரியுமா?’
    ‘வாங்கிய கடனைக் கட்டாவிட்டால் வங்கி ஓலை அனுப்பிவிடும்’