தமிழ் கக்கு யின் அர்த்தம்
கக்கு
வினைச்சொல்
- 1
(சாப்பிட்டதை அல்லது நோய், விபத்து காரணமாக இரத்தம் போன்றவற்றை வாய் வழியாக) வெளித்தள்ளுதல்; வாந்தியெடுத்தல்.
‘குழந்தை குடித்த பாலையெல்லாம் கக்கிவிட்டது’‘விபத்தில் அடிபட்டவர் இரத்தம் கக்கி இறந்துபோனார்’ - 2
(விஷமுடைய பிராணிகள் விஷத்தை) உமிழ்தல்.
- 3
(எரிமலை தீக்குழம்பை அல்லது இயந்திரம் முதலியவை புகையை) அதிக அளவில் வெளியேற்றுதல்.
‘பேருந்து புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது’‘நெருப்பைக் கக்கும் எரிமலையைத் தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறோம்’உரு வழக்கு ‘அனல் கக்கும் விழிகள்’ - 4
(மறைத்துவைத்திருந்த செய்தியை நிர்ப்பந்தத்தின் பேரில்) வெளியிடுதல்.
‘அடி பொறுக்காமல் அவன் உண்மையைக் கக்கிவிட்டான்’