தமிழ் கங்கு யின் அர்த்தம்

கங்கு

பெயர்ச்சொல்

 • 1

  முழுதும் தணலாக உள்ள கரித் துண்டு.

  ‘அடுப்பிலிருந்து கங்குகளை வெளியில் தள்ளி நீர் தெளித்து அணைத்தாள்’

தமிழ் கங்கு யின் அர்த்தம்

கங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வெட்டிய பிறகு தென்னை, பனை போன்ற மரங்களில் எஞ்சியிருக்கும்) மட்டையின் அடிப்பகுதி.

  ‘அடுப்பு எரிப்பதற்குக் கங்கு மட்டை நல்லது’
  ‘மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கங்குகளைப் பிடுங்கிப் போட்டுவிடு’