தமிழ் கசக்கு யின் அர்த்தம்

கசக்கு

வினைச்சொல்கசக்க, கசக்கி

 • 1

  (ஒன்றை உள்ளங்கையில் வைத்து மற்றொரு கையால்) அழுத்தித் தேய்த்தல்; (கண்களைக் கையால்) தேய்த்தல்.

  ‘பச்சிலையை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி இரண்டு சொட்டு கண்ணில் விடவும்’
  ‘தூசி விழுந்துவிட்டது என்பதற்காகக் கண்ணை இப்படியா கசக்க வேண்டும்?’
  உரு வழக்கு ‘அந்தச் சோகம் என் மனத்தைக் கசக்கியது’

 • 2

  (சலவை செய்த துணிகளில்) மடிப்புகளும் சுருக்கங்களும் தோன்றும்படி செய்தல்; (தாள் முதலியவற்றைக் கையால்) கண்டபடி மடக்குதல்.

  ‘சட்டையைக் கசக்கிவிட்டதற்காகக் குழந்தையைப் போட்டு அடிப்பதா?’

 • 3

  (துணிகளை அழுக்கு போவதற்காகக் கைகள் இடையே வைத்து) தேய்த்துத் துவைத்தல்.

  ‘வேட்டியைக் கசக்கிக் காயப் போடு!’