தமிழ் கச்சல் யின் அர்த்தம்

கச்சல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வாழைக்காயைக் குறித்து வரும்போது) உரிய வளர்ச்சி அடையாமல் சற்றுக் கறுத்துக் காணப்படும் காய்.

  ‘மூன்று ரூபாய் கொடுத்து இந்தக் கச்சல் வாழைக்காயை வாங்கி வந்திருக்கிறாயே?’

 • 2

  (ஒருவரின் உருவத்தைக் குறிக்கும்போது) கறுத்தும் ஒல்லியாகவும் இருக்கும் நிலை.

  ‘ஆள் ஏன் இப்படிக் கச்சலாக இருக்கிறான்?’
  ‘கச்சலாக உயரமாக இருப்பாரே, அவரா உன் மாமா?’

தமிழ் கீச்சல் யின் அர்த்தம்

கீச்சல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கூச்சல்; சத்தம்.

  ‘என்ன அந்தப் பக்கம் ஒரே கீச்சலாக இருக்கிறது?’
  ‘அந்தக் கீச்சலுக்கிடையில் நான் எதையும் கவனிக்கவில்லை’