தமிழ் கச்சேரி யின் அர்த்தம்

கச்சேரி

பெயர்ச்சொல்

 • 1

  (இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சி.

  ‘இன்றைக்கு இசை விழாவில் யாருடைய கச்சேரி?’
  ‘நாட்டியக் கச்சேரி’

 • 2

  (பெரும்பாலும் சில பொழுதுபோக்கு முறைகளைக் குறித்த சொற்களுடன் இணைந்து) கூட்டம்.

  ‘சீட்டுக் கச்சேரி’
  ‘அரட்டைக் கச்சேரி’

தமிழ் கச்சேரி யின் அர்த்தம்

கச்சேரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு நீதிமன்றம்.

 • 2

  அருகிவரும் வழக்கு காவல் நிலையம்.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு அருகிவரும் வழக்கு அரசின் மாவட்டத் தலைமை அலுவலகம்.