தமிழ் கசி யின் அர்த்தம்

கசி

வினைச்சொல்கசிய, கசிந்து

 • 1

  (இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல்; ஒழுகுதல்.

  ‘புது மண்பானையிலிருந்து தண்ணீர் கசிகிறது’
  ‘வெற்றிலைச் சாறு கசியும் கடைவாய்’
  உரு வழக்கு ‘அந்த நடிகரின் காதல் திருமணத்தைப் பற்றிய செய்தி எப்படியோ பத்திரிகைகளின் வழியாகக் கசிந்துவிட்டது’

 • 2

  (கண்கள் கண்ணீரால், சுவர் நீரினால்) ஈரமாதல்.

  ‘கண்கள் கசிந்து பளபளத்தன’
  ‘மழையினால் சுவர் கசிந்திருக்கிறது’

 • 3

  (பக்தி, பரவசம் போன்ற உணர்ச்சிகள் மனத்தில்) ததும்புதல்.

  ‘இறைவனை நினைத்து மனம் கசிந்து பாடினான்’

 • 4

  (வெல்லம், சீனி, உப்பு போன்றவை ஈரப்பதத்தால்) இளகுதல்.

  ‘கருப்பட்டி கசிந்து எறும்பு மொய்க்கத் தொடங்கிவிட்டது’
  உரு வழக்கு ‘கல்மனத்தையும் கசிய வைக்கும் சோகக் கதை’

 • 5

  (மிகச் சிறிய திறப்பின் வழியாக வாயு) வெளியேறுதல்.

  ‘சமையல் வாயு கசிந்தால் ஜன்னலைத் திறந்து வைக்கவும்’