தமிழ் கட்டிப்போடு யின் அர்த்தம்

கட்டிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஒன்றைச் செய்ய விடாமல்) கட்டுப்படுத்துதல்.

    ‘அப்பா என்னைக் கட்டிப்போட்டுவிட்டார். இல்லையென்றால் அவனை நான் அடித்து நொறுக்கியிருப்பேன்’
    ‘அவர்மேல் எனக்கு இருந்த நன்றியுணர்ச்சி அவரை எதிர்த்துப் பேசவிடாமல் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது’