தமிழ் கட்டுமானம் யின் அர்த்தம்

கட்டுமானம்

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டடம் போன்றவற்றின்) உருவாக்கம்; நிர்மாணம்.

  ‘கோபுரக் கட்டுமானப் பணி சென்ற மாதம் துவங்கியது’
  ‘கட்டுமானம் சரியாக இல்லாததால் பாலத்தில் விரிசல் கண்டுவிட்டது’

 • 2

  கட்டப்பட்ட அமைப்பு; கட்டடம்.

  ‘இது கருங்கற்களால் ஆன ஒரு கட்டுமானம் ஆகும்’

தமிழ் கட்டுமானம் யின் அர்த்தம்

கட்டுமானம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு கட்டுப்பாடு.

  ‘ஊர்க் கட்டுமானத்தை யார் மீற முடியும்?’