தமிழ் கடன்படு யின் அர்த்தம்

கடன்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருத்தல்.

    ‘அவர் எனக்கு ஆயிரம் ரூபாய் கடன்பட்டிருக்கிறார்’

  • 2

    (ஒருவர் செய்த நன்மை, உதவி ஆகியவற்றின் காரணமாக) கடமைப்படுதல்.

    ‘நண்பர்களுடைய உதவிக்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன்’