தமிழ் கடுதாசி யின் அர்த்தம்

கடுதாசி

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு கடிதம்.

  ‘ஊருக்குப் போனவுடன் ஒரு கடுதாசி போடு’

 • 2

  அருகிவரும் வழக்கு காகிதம்; தாள்.

  ‘ஒரு கடுதாசி கொடு. என் முகவரியை எழுதித் தருகிறேன்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு சீட்டுக் கட்டு.

  ‘சின்ன வயதிலேயே கடுதாசி விளையாடத் தொடங்கிவிட்டான்’
  ‘எந்த நாளும் கடுதாசி விளையாடுவதுதான் உனக்கு வேலையா?’