தமிழ் கடும் யின் அர்த்தம்

கடும்

பெயரடை

 • 1

  (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகமான; மிகுதியான.

  ‘கடும் குளிர்’
  ‘கடும் கோபம்’
  ‘கடும் வேகம்’

 • 2

  மிகவும் தீவிரமான; பலத்த.

  ‘கடும் போர்’
  ‘கடும் வாக்குவாதம்’

 • 3

  கொடுமையான.

  ‘கடும் சட்டதிட்டம்’
  ‘கடும் சொல்’

தமிழ் கடும் யின் அர்த்தம்

கடும்

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பகல் அல்லது இரவின் நடுப்பொழுது.

  ‘கடும் மத்தியானத்தில் ஏன் திரிகின்றாய்; தடிமன் பிடித்துவிடும்’
  ‘கடும் இரவில் எங்கே போய்விட்டு வருகிறாய்?’