தமிழ் கடைசி யின் அர்த்தம்

கடைசி

பெயர்ச்சொல்

 • 1

  (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவு; இறுதி.

  ‘இன்றுதான் பள்ளிக்கூடத்தில் பணம் கட்டுவதற்குக் கடைசி நாள்’
  ‘இடது பக்கம் கடைசியில் உட்கார்ந்திருப்பவர்தான் என் மாமா’
  ‘மாதக் கடைசியில் யாரிடமும் கடன் கேட்க முடியாது’
  ‘முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை விறுவிறுப்பான நாவல் இது’
  ‘வீட்டில் நான்தான் கடைசிப் பையன்’