தமிழ் கண்கூடு யின் அர்த்தம்

கண்கூடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மிகவும் தெளிவு; வெளிப்படை.

    ‘பட்டப்பகலில் திருட்டு நடந்திருக்கிறது என்றால் அந்த நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை என்பது கண்கூடு’
    ‘பொதுமக்களுக்குக் கண்கூடாகத் தெரியும் இந்தக் குறை அதிகாரிகளுக்குத் தெரியாத ஒன்றா?’