தமிழ் கணக்குவழக்கு யின் அர்த்தம்

கணக்குவழக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவு.

  ‘வீட்டில் கணக்குவழக்கையெல்லாம் யார் பார்த்துக்கொள்கிறார்கள்?’
  ‘இன்றைய கணக்குவழக்கை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும்’

 • 2

  பேச்சு வழக்கு கொடுக்கல்வாங்கல்.

  ‘அவருடைய கணக்குவழக்கையெல்லாம் இன்று முடித்து மிச்சப் பணத்தை அவருக்கு அனுப்பிவிடு’

 • 3

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) அளவு; எண்ணிக்கை.

  ‘கணக்குவழக்கு இல்லாமல் செலவழிக்கிறான்’