தமிழ் கண்டனம் யின் அர்த்தம்

கண்டனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிகழ்வை, செயல்பாட்டை, கூற்றை) ஏற்றுக்கொள்ள முடியாது என்று வன்மையாகத் தெரிவிக்கும் நிலைப்பாடு.

    ‘தலைவர் இறந்தபின் நிகழ்ந்த வன்முறையைக் குறித்து அவர் பலத்த கண்டனம் தெரிவித்தார்’
    ‘அந்தக் கதை பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்று கண்டனம் கிளம்பியுள்ளது’
    ‘அவருடைய மதவாதப் பேச்சு கண்டனத்துக்கு உரியது’