தமிழ் கண்டறி யின் அர்த்தம்

கண்டறி

வினைச்சொல்-அறிய, -அறிந்து

  • 1

    (இதுவரை அறியப்படாதிருப்பதை அல்லது போதிய தகவல் இல்லாததை) தெரிந்துகொள்ளுதல்.

    ‘தமிழகத்தில் நிலவும் வறட்சியைக் கண்டறிய மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளது’
    ‘சுதேசித் தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும்’
    ‘உண்மையைக் கண்டறிவதுதான் இந்தக் குழுவின் பணி’