தமிழ் கண்டுகொள் யின் அர்த்தம்

கண்டுகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (இன்னது, இன்னார் என்று) இனம் தெரிந்துகொள்ளுதல்; அறிந்துகொள்ளுதல்.

  ‘இரவா பகலா என்பதைக் கூடக் கண்டுகொள்ள முடியாத மயக்கத்தில் அவன் கிடந்தான்’
  ‘ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள தனித்தன்மையைக் கண்டுகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்’

 • 2

  (எதிர்மறை வடிவங்களில்) தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளுதல்.

  ‘நீ சம்பந்தப்படாத இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் உனக்கு நல்லது’
  ‘அக்கிரமங்கள் நடக்கும்போது கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?’

 • 3

  பேச்சு வழக்கு (மதிப்புக்கு உரியவர்களை) நேரில் சென்று பார்த்தல்.

  ‘உங்களைக் கண்டுகொண்டு போகலாம் என்று வந்தேன்’

தமிழ் கண்டுகொள் யின் அர்த்தம்

கண்டுகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

இலங்கைத் தமிழ் வழக்கு