தமிழ் கண்ணி யின் அர்த்தம்

கண்ணி

பெயர்ச்சொல்

 • 1

  (பறவைகளைப் பிடிப்பதற்காக) தரையில் பரப்பியிருக்கும் கயிற்றுச் சுருக்குகள் கொண்ட அமைப்பு.

  ‘காடை, கவுதாரி போன்ற பறவைகளை இன்னும் கண்ணி வைத்துப் பிடிப்பதைப் பார்க்கலாம்’

 • 2

  (சங்கிலியில் ஒரு) வளையம்.

  ‘சங்கிலியில் கண்ணி அறுந்துவிட்டது’
  உரு வழக்கு ‘சமூகச் சங்கிலியில் தனி மனிதன் ஒரு கண்ணி’

 • 3

  (பூச்சரத்தில்) நாரில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பூத் தொகுப்பு.

  ‘ஒரு முழச் சரத்தில் இருபது கண்ணி’
  ‘கண்ணிகள் இடையே இடைவெளி அதிகம்’

 • 4

  (யாப்பில்) ஒரே எண்ணிக்கையில் சீர்கள் கொண்ட இரண்டடி இசைப்பாட்டு வகை.