தமிழ் கண்ணுக்குக் கண்ணாக யின் அர்த்தம்

கண்ணுக்குக் கண்ணாக

வினையடை

  • 1

    மிகுந்த பாசத்துடன் அல்லது விருப்பத்துடன்; அக்கறையாக.

    ‘கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டேனே என்று அவள் அழுதாள்’
    ‘தன் நண்பனின் குழந்தைகள் என்று வித்தியாசம் பார்க்காமல் அவர்களைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தார்’
    ‘நான் கண்ணுக்குக் கண்ணாக வைத்திருந்த வண்டி காணாமல் போய்விட்டது’