தமிழ் கண்திற யின் அர்த்தம்

கண்திற

வினைச்சொல்-திறக்க, -திறந்து

 • 1

  (பிறந்தவுடன் குழந்தை) முதல்முறையாகக் கண்ணைத் திறந்து பார்த்தல்.

  ‘இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இன்னும் கண்திறக்கவில்லை’

 • 2

  (விக்கிரகம், சிலை அல்லது ஓவியத்திலுள்ள உருவம் ஆகியவற்றுக்குக் கடைசியாக) கண் விழியைச் செதுக்குவதன் அல்லது வரைவதன் மூலம் அது பார்ப்பதான தோற்றம் கொள்ளச்செய்தல்.

  ‘அம்மன் சிலைக்கு இன்று சிற்பி கண்திறக்கப்போகிறார்’

 • 3

  (ஒருவர் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்து மாறி) உண்மை தெரியவருதல்.

  ‘நேற்று நடந்த சம்பவத்தால் என் கண்திறந்தது’