தமிழ் கண்மூடித்தனம் யின் அர்த்தம்

கண்மூடித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எதையும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அல்லது அறிவுபூர்வமாக இல்லாமல் நடந்துகொள்ளும் செயல்; மடத்தனம்.

  ‘புதுமை என்பதாலேயே ஒன்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது’
  ‘நடிகர்களுக்காக ரசிகர்கள் அடித்துக்கொள்வதெல்லாம் சுத்தக் கண்மூடித்தனம்’
  ‘நண்பன் என்பதற்காக அவன் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காதே’

 • 2

  எந்தப் பாகுபாடும் ஆலோசனையும் இல்லாத தன்மை.

  ‘விவசாயத்திற்காகப் பெரும் அளவில் காடுகள் கண்மூடித்தனமாக அழிக்கப்படுகின்றன’
  ‘கண்மூடித்தனமான குண்டுவீச்சால் ஒரு நகரமே அழிந்தது’