தமிழ் கத்தரி யின் அர்த்தம்

கத்தரி

வினைச்சொல்கத்தரிக்க, கத்தரித்து

 • 1

  (துணி, தாள் போன்றவற்றை) கத்தரிக்கோலால் வெட்டுதல்; துண்டாக்குதல்.

  ‘நான் கொடுத்த அளவுகளின்படி சட்டைத் துணியைக் கத்தரித்து வைத்தான்’
  ‘இவை வண்ணக் காகிதத்தைக் கத்தரித்து உருவாக்கிய பொம்மைகள்’

 • 2

  (வெட்டுக்கிளி, எலி முதலியவை பயிர்களைக் கடித்து) துண்டாக்குதல்.

  ‘பூச்சிகள் இப்படிப் பயிர்களைக் கத்தரித்தால் எப்படி விளைச்சலைப் பார்ப்பது?’

 • 3

  (ஒருவருடன் உள்ள உறவை, நட்பை) முறித்துக்கொள்ளுதல்/(ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சை) முடித்துக்கொள்ளுதல்.

  ‘இப்படி நெருக்கமாகப் பழகிவிட்டுத் திடீரென்று நட்பைக் கத்தரித்துக்கொண்டு போக அவனுக்கு எப்படி மனம்வந்தது?’
  ‘அவர் என் குடும்ப விவகாரங்களைக் கேட்க ஆரம்பித்ததும் பேச்சைக் கத்தரித்துவிட்டேன்’

தமிழ் கத்தரி யின் அர்த்தம்

கத்தரி

பெயர்ச்சொல்