தமிழ் கத்தி யின் அர்த்தம்

கத்தி

பெயர்ச்சொல்

 • 1

  பட்டையான உலோகத் தகடால் ஆன, நறுக்குவதற்கும் வெட்டுவதற்கும் பயன்படும் சிறு சாதனம்.

  ‘மாம்பழத்தை அம்மா கத்தியால் நறுக்கினாள்’
  ‘வெள்ளரிக்காயின் தோலைச் சீவக் கத்தியைக் கொண்டு வா’
  ‘திருடன் கத்தியைக் காட்டிப் பயமுறுத்திப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டான்’

 • 2

  வாள்.

  ‘அந்தக் காலத்தில் அரச குமாரர்கள் கத்திச் சண்டையும் பயின்றனர்’