தமிழ் கதம்பம் யின் அர்த்தம்

கதம்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பல வகையான) பூக்களும் இலைகளும் வேர்களும் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட சரம்.

  ‘கதம்பம் முழம் என்ன விலை?’

 • 2

  (ஒரே சமயத்தில்) பலவற்றின் கலவை.

  ‘பல ஒலிபெருக்கிகளிலிருந்து வெளிப்பட்ட ஒரு கதம்பமான சத்தம்’
  ‘பூக்களின் கதம்பமான மணம்’
  ‘இந்தக் கூட்டணி பல அரசியல் கட்சிகளின் கதம்பமாக அமைந்திருக்கிறது’