தமிழ் கதாநாயகன் யின் அர்த்தம்

கதாநாயகன்

பெயர்ச்சொல்

 • 1

  (காப்பியம், திரைப்படம் முதலியவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்.

  ‘இராமாயணத்தின் கதாநாயகன் ராமன்’
  ‘பல படங்களில் கதாநாயகனாக நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு’

 • 2

  ஒரு நிகழ்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கும் நபர்.

  ‘அன்றைய விழாவில் என் மாமாதான் கதாநாயகன்’