தமிழ் கத்தல் யின் அர்த்தம்

கத்தல்

பெயர்ச்சொல்

 • 1

  உரத்த குரலில் ஆன பேச்சு.

  ‘‘கிட்டே வராதே’ என்று அவள் போட்ட கத்தலில் குழந்தை பயந்துவிட்டது’

 • 2

  அலறல்.

  ‘தொட்டிலில் படுத்திருந்த குழந்தையிடமிருந்து ‘வீல்’ என்று ஒரு கத்தல்’

 • 3

  (விலங்குகள், பறவைகள் எழுப்பும்) உரத்த ஒலி.

  ‘ஆடுகளின் ‘மே’ என்ற கத்தல்’