கன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன1கன2கன3கன4

கன1

வினைச்சொல்கனக்க, கனத்து

 • 1

  (தூக்கும்போது சிரமத்தைத் தரக்கூடிய அளவில்) அதிக எடை அல்லது பளு உடையதாக இருத்தல்.

  ‘சாமான்கள் நிறைந்திருந்த பெட்டி தூக்க முடியாமல் கனத்தது’

 • 2

  (ஜலதோஷத்தால் தலை) பாரமாக இருத்தல்/(மனத்தில்) சோகம், துக்கம் போன்ற உணர்வு நிறைந்திருத்தல்.

  ‘இரண்டு நாட்களாக எனக்குத் தலை கனத்துக்கொண்டிருக்கிறது’
  ‘நெஞ்சம் கனக்க அவள் அவனை வழியனுப்பினாள்’

 • 3

  (ஒருவரின் உடல் அல்லது உடலின் ஒரு பகுதி) பெருத்தல்.

  ‘முன்பு பார்த்தபோது இருந்ததைவிட இப்போது சற்றுக் கனத்திருக்கிறாய்’

 • 4

  (மழை, காற்று) வலுத்தல்.

  ‘மழை கனக்க ஆரம்பித்துவிட்டது’

கன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன1கன2கன3கன4

கன2

பெயரடை

 • 1

  அளவின் மிகுதியை உணர்த்தும் ஒரு பெயரடை; மிகுந்த.

  ‘இன்று இரவு கன மழை பெய்யலாம்’

கன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன1கன2கன3கன4

கன3

பெயரடை

 • 1

  ஒரு குறிப்பிட்ட அளவைப் பக்கமாகக் கொண்டிருக்கும் கனச்சதுரம் கொள்ளும் அளவுக்கு இணையான கொள்ளளவைக் குறிக்கும் அலகு.

  ‘அணையில் இரண்டாயிரம் கன அடி நீர் உள்ளது’
  ‘கன மீட்டர்’
  ‘கன சென்டிமீட்டர்’

கன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன1கன2கன3கன4

கன4

இடைச்சொல்

 • 1

  ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘வண்டி கன வேகமாகச் சென்றுகொண்டிருந்தது’
  ‘வேலையைக் கன கச்சிதமாக அவள் முடித்துவிட்டாள்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு ‘(தூரத்தில், காலத்தில்) நீண்ட’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கன காலமாக நீ எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை’
  ‘கன நாட்களாக நான் வெளிநாடு போவதற்காகக் காத்திருக்கிறேன்’
  ‘கோயிலை அடைய கன தூரம் நடக்க வேண்டும்’
  ‘அவர் கன நீளமாகக் கதைத்துக்கொண்டே இருப்பார்’