கன்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன்று1கன்று2

கன்று1

வினைச்சொல்கன்ற, கன்றி

 • 1

  (அடிபட்ட இடம் பொட்டாகவோ வரியாகவோ) கறுத்துக் காணப்படுதல்.

  ‘வாழைப்பழச் சீப்பில் சில பழங்கள் கன்றியிருந்தன’
  ‘சவுக்கடி பட்ட முதுகு வரிவரியாகச் சிவந்து கன்றிக் காணப்பட்டது’

 • 2

  (அவமானத்தால், கோபத்தால் முகம்) சிறுத்தல்; கடுமை ஏறி இருத்தல்.

  ‘இப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டுவிட்டானே என்ற அவமானத்தில் அவர் முகம் கன்றிச் சிவந்தது’

 • 3

  (உள்ளங்கை) காய்த்தல்.

  ‘கோடாலியால் வெட்டிப் பழக்கம் இல்லை; உள்ளங்கை கன்றிப்போய்விட்டது’

கன்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கன்று1கன்று2

கன்று2

பெயர்ச்சொல்

 • 1

  (எருமை, பசு முதலிய சில விலங்குகளின்) குட்டி.

 • 2

  (தென்னை, வாழை முதலியவை அல்லது ரோஜா முதலியவை) மரமாவதற்கு அல்லது செடியாவதற்கு முன் உள்ள நிலை.

  ‘வாழைக் கன்று’
  ‘ரோஜாக் கன்று’