தமிழ் கப்பி யின் அர்த்தம்

கப்பி

பெயர்ச்சொல்

 • 1

  (தார் போடாத சாலை அமைக்கப் பயன்படுத்தும்) பொலபொலவென்று சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுசிறு கற்கள்/ கையளவிலான கருங்கல்.

  ‘எங்கள் ஊர் கப்பிச்சாலை என்றுதான் தார்ச்சாலை ஆகுமோ?’
  ‘மாட்டு வண்டிகளின் சக்கரங்கள் கப்பிச் சாலையில் போய் எங்கும் செம்மண் புழுதி’

 • 2

  வட்டார வழக்கு (செந்நிற) தவிடு.

 • 3

  வட்டார வழக்கு இடித்த அரிசி மாவைச் சலித்த பிறகு எஞ்சும், பொடிப்பொடியான கல்போல உடைந்த அரிசி.

தமிழ் கப்பி யின் அர்த்தம்

கப்பி

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை இழுத்துத் தூக்கப் பயன்படும் விதத்தில் கயிறு, கம்பி முதலியவை பதிந்து) சுற்றக்கூடிய உருளை; சகடை; ராட்டினம்.