தமிழ் கம்பீரம் யின் அர்த்தம்

கம்பீரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சு, நடை, பார்வை முதலியவற்றில் வெளிப்படும்) ஆளுமை மிக்க தோரணை; மிடுக்கு.

  ‘அவர் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கம்பீரமாக நின்றிருந்தார்’

 • 2

  (பிரம்மாண்டத்தாலோ அழகாலோ) பிரமிப்பை உண்டாக்கும் தோற்றம்.

  ‘கஞ்சின்ஜிங்கா சிகரத்தின் கம்பீரத்தை எளிதில் விவரிக்க முடியாது’
  ‘நகரத்தின் பிரதான சாலையில் அந்த வங்கியின் கட்டடம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது’