தமிழ் கம்பி யின் அர்த்தம்

கம்பி

பெயர்ச்சொல்

 • 1

  உலோக இழை; தந்தி.

  ‘ஒன்பது கம்பிகள் கொண்ட வீணை’
  ‘தங்கத்தைக் கம்பியாக இழுக்க முடியும்’
  ‘கம்பிக் கரை வேட்டி’

 • 2

  (பருமன் குறைவாகவும் நீளம் அதிகமாகவும் உள்ள) உலோகத் துண்டு.

  ‘ஜன்னல் கம்பி’
  ‘குடைக் கம்பி’

 • 3

  (கோலத்தில்) ஒரு கோடு.

  ‘அம்மா கோலத்தில் உள்ள கம்பிகளைப் புள்ளிகளுக்கு ஏற்றவாறு வளைத்துப் போட்டாள்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (மரத்திலிருந்து இலை, காய் போன்றவை பறிக்கப் பயன்படும்) சுமார் ஒரு மீட்டர் நீளத்தில் கூர்மையான வளைந்த முனையோடு இருக்கும் கம்பி போன்ற இரும்புச் சாதனம்.

  ‘கம்பி நிறைய இலை வந்ததும் மாட்டுக்குப் போடு’
  ‘கம்பி எடுத்துப்போய் ஆட்டுக்குப் பலா இலை குத்தி வா’