தமிழ் கமழ் யின் அர்த்தம்

கமழ்

வினைச்சொல்கமழ, கமழ்ந்து

  • 1

    (மணம்) நிறைந்திருத்தல்.

    ‘ஊதுவத்தி மணம் கமழும் பூஜை அறை’
    ‘அருகில் நின்றிருந்தவரிடமிருந்து ஜவ்வாது மணம் கமழ்ந்தது’
    உரு வழக்கு ‘தெய்வ மணம் கமழும் பாசுரங்கள்’