தமிழ் கரடிவிடு யின் அர்த்தம்

கரடிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தான் சொல்வதை மற்றவர் நம்பிவிடுவார் என்ற நினைப்பில்) தீங்கற்ற பொய் சொல்லுதல்.

    ‘காலையில்தான் சம்பளம் வாங்கினாய். அதற்குள் கையில் பணமே இல்லை என்று கரடிவிடுகிறாய்!’
    ‘உன் பேரில் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நீ ஏழை என்று யாரிடம் கரடிவிடுகிறாய்?’