கரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரி1கரி2கரி3கரி4

கீரி1

பெயர்ச்சொல்

 • 1

  நீண்ட உடலையும் வாலையும், கூரிய பற்களையும் கொண்ட, சாம்பல் நிறத்தில் காணப்படும், (பாம்புக்குப் பகை என்று நம்பப்படும்) ஒரு விலங்கு.

  ‘பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாது என்னும் நம்பிக்கை உண்மை அல்ல’

கரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரி1கரி2கரி3கரி4

கரி2

வினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து

 • 1

  (தீயினால்) கருகுதல்; தீய்தல்.

  ‘தீப்பிடித்து ஏதோ கரிகிறது’

கரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரி1கரி2கரி3கரி4

கரி3

வினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (நெருப்பில் எரித்து) கரியாக்குதல்; தீய்த்தல்.

  ‘சில வேர்களைக் கரித்து மருந்தாகப் பயன்படுத்துவது உண்டு’

கரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரி1கரி2கரி3கரி4

கரி4

வினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து

 • 1

  உப்புக்கரித்தல்.

  ‘குழம்பில் உப்பை அள்ளிக் கொட்டியிருப்பார்கள்போல் இருக்கிறது; பயங்கரமாகக் கரிக்கிறது’

 • 2

  (அளவுக்கு மீறி உண்பதாலோ அல்லது ஒத்துக்கொள்ளாத உணவுப் பண்டத்தைச் சாப்பிடுவதாலோ நெஞ்சில்) அசௌகரியமாக உணர்தல்.

  ‘காலையிலிருந்தே எனக்கு நெஞ்சைக் கரித்துக்கொண்டிருக்கிறது’

கரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரி1கரி2கரி3கரி4

கரி

பெயர்ச்சொல்

 • 1

  மரத்தை எரித்துக் கிடைக்கும் கரிய நிறத் துண்டு.

  ‘கரி அடுப்பு’

 • 2

  புகையின் கரிய நிறப் படிவு.

  ‘விளக்கின் சிம்னி கரி பிடித்துக்கிடந்தது’

 • 3

  வேதியியல்
  எதனோடும் கலக்காத சுத்த நிலையில் வைரம், கிராஃபைட் போன்றவையாக இருக்கும், எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு தனிமம்.